( வி.ரி. சகாதேவராஜா)
உலக அமைதி மக்களின் நன்மைக்காக,
பூலோக
சித்தர்களின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி
இலுக்குப்பொத்தானை வேலோடுமலையில் ஏழாவது நாளாக சர்வ வல்லமை வாய்ந்த 210
நாட்கள் 210 சித்தர்கள் மகா யாகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த
1 ஆம் திகதி சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக
காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள்
வேள்வியை, சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ தலைமை
தாங்கி நடாத்தி வருகிறார்.
சித்தர்களின்
ஆதி இருப்பிடமுமான போகர் பெருமான் சிகண்டி முனிவர் ரூபத்தில் இன்றும்
சித்தர்களோடு வாழும் இலங்கையில் சித்தாண்டி வேலோடும் மலையில் காகபுஜண்டர்
அருளாணைப்படி இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களின் அருளாசியை வேண்டி, உலக
மக்களின் நன்மைக்காக
இம் மகா யாகம் நடைபெற்று வருகிறது.
நூறு
கோடி சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் எதிர்வரும் (26/11/2026) வியாழக்கிழமை வரை
தொடர்ந்து 210 நாட்கள் காலையும் மாலையும் இதுவரை உலகில் எங்குமே நடந்திராத
அளவுக்கு அபூர்வ சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்த்த சித்தர்கள்
வேள்வி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு சித்தர்களுக்காக குருபூஜை செய்து அந்தந்த சித்தர்களை
பூஜித்து அவர்களுக்குரிய வழிபாட்டை செய்து வேள்வி நடைபெற்று வருகிறது.




Post A Comment:
0 comments so far,add yours