தனது 34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி புஸ்பாதேவி தர்மலிங்கம் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 25 ஆம்திகதி திங்கட்கிழமை அதிபர் கே.தியாகராஜா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இவர் மண்டூர் கிராமத்தில் குழந்தவேல் இராஜம்மா தம்பதிகளின் புதல்வி என்பதுடன் தனது ஆரம்பக்கல்வியினை மண்டூர் இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியினை மண்டூர் மகாவித்தியாலயத்திலும் கற்று பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியராக 34 வருடம் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார்
இவரது சேவையினைப்பாராட்டும் நிகழ்வில் பிரதி அதிபர் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours