(கனகராஜா சரவணன்))
மட்டக்களப்பு
நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலை உட்பட 5
குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட
வழக்கினையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்
உணவக உரிமையாளரை 50 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறும் 14 நாட்களுக்கு
உணவகத்தை மூடி சீல் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (15) கட்டளை
பிறப்பித்ததையடுத்து குறித்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது--
.
குறித்த
உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி
மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வழங்கி வந்துள்ளதை கண்டறிந்து கடை
உரிமையாளருக்கு எதிராக 3 வது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை மனித
நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையின் கீழ் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்
வைத்திருந்தமை,
உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் பீடைகள் தொற்று
வாய்ப்பு உள்ளதாகவும், உணவுடன் நேரடி தொடர்புடைய பணியாற்றும்
மேற்பரப்புக்கள் நோய் பரவு கூடியதாகவும் தூய்மை இன்றி காணப்பட்டது, மலசல
கூடம் முன்னால் நேரடியாக உள்ள இடப்பரப்பில் உணவு உற்பத்தி செய்தமை, உணவு
உற்பத்தி செய்யும் இடமானது திண்ம, திரவ, வாயு கழிவுகளை அப்புறப்படுத்த
முடியாத இடப்பரப்பில் காணப்பட்டமை ஆகிய 5 குற்றச்சாட்டுகள் முன்வைத்து
வழக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்தனர்.
இந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் குறித்த உணவக உரிமையாளரை
அபதாரமாக 50. ஆயிரம் ரூபா செலுத்துமாறும் உணவகத்ததை தற்காலிகமாக 14
நாட்டகளுக்கு மூடி சீல் வைக்குமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்

.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours