( வி.ரி.சகாதேவராஜா)
விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன இணைந்து நடத்திய பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா, நேற்று (17)ஞாயிற்றுக்கிழமைவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
முன்னதாக அப்பர் வேடம் தரித்த குழந்தைகள் சகிதம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் அரோஹரா கோஷம் முழங்க இடம்பெற்றது.
இவ்விழாவின் பிரதான ஆன்மீக வழிபாடாக அமைந்த குருபூசையினை திரு ஆறுமுகம் கிருபாகர குருக்கள் மிக பக்திபூர்வமாகவும், சாஸ்திர முறைப்படியும் நடாத்தி வைத்தார்.
விழாவில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர், ரி.ஜே.அதிசயராஜ்
,செல்வி. நிசாந்தி தேவராஜ் (கலாசார அலுவலர்)
ரி.மதனசீலன் (கலாசார அலுவலர்)
கண. இராஜரெட்னம் (பணிப்பாளர்) திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்
பா.சந்திரேஸ்வரன் (செயலாளர்)
சோ. இரவிந்திரன்
திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்
வருகை தந்திருந்தனர்.
இவ்விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக இருவேறு உன்னத கௌரவிப்புகள் இடம்பெற்றன.
ஆலயத் தொண்டர்கள் கௌரவிப்பு: நீண்டகாலமாக ஆலயங்களில் எவ்வித பிரதிபலனுமின்றி, அர்ப்பணிப்புடன் ஆன்மீகத் திருப்பணிகளையும் உழவாரப் பணிகளையும் மேற்கொண்டு வரும் பல ஆன்மீகத் தொண்டர்கள் (Devotees) அவர்களின் மகத்தான தியாக சேவைக்காக இதன்போது பொன்னாடை போர்த்தி விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர் பரிசளிப்பு: பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று விசேட திறமைகளை வெளிப்படுத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் விசேட விருதுகளும் மதிப்பிற்குரிய விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆன்மீக மற்றும் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேறின. திருமுறை ஓதுதல், பக்திப் பாடல்கள் மற்றும் அப்பர் பெருமானின் வாழ்வியலை விளக்கும் உன்னத கலை நிகழ்வுகள் விழாவிற்கு வருகை தந்திருந்தோரை வெகுவாகக் கவர்ந்தன.
இவ்விழாவினைச் சிறப்பிப்பதற்காகப் பல உயர் அதிகாரிகளும், ஆலயங்களின் நம்பிக்கையாளர்களும், சமூகப் பெரியார்களும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் நேர்த்தியான வழிநடத்தலிலும், கிராம மக்கள் மற்றும் அடியார்களின் பேராதரவோடும் நடைபெற்ற இவ்விழா, விநாயகபுரம் மண்ணில் சைவ மறுமலர்ச்சியையும், ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)




Post A Comment:
0 comments so far,add yours