சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அப்பாடசலையில்  இடம்பெற்றது

அப்பாடசாலையின்  அதிபர் சுவிஸ் உதயம் அமைப்பிடம் ; வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவியினை சுவிஸ் உதயம் அமைப்பு வழங்கிவைத்தது

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் க.துரைநாயகம் செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பொருளாளர் கருஸ்ராஜ் உபதலைவர் ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளருமான  சா.நடனசபேசன் உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் கண்ணன் பாடசாலையின் அதிபர் கே.ராமநாயக்க மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

இவ்வமைப்பானது தொடர்ச்சியாக இவ்வாறான பல உதவிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது
























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours