( வி.ரி.சகாதேவராஜா)
பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .

காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ  பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந்,  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக வைத்திய அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த வாரம் அவர் அங்கு சென்று கடமையை பொறுப்பேற்றார். அங்கு 10 வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலான 56 வைத்தியர்கள், 101 தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 350 க்கு மேற்பட்ட ஊழியர்களுள்ளனர்.

மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்துக்கான பயிற்சியை பெறமுன், இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரியாக சீரிய பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சமுதாய சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை பூர்த்தி செய்த காரைதீவின் இரண்டாவது வைத்திய அத்தியட்சகராவார். காரைதீவு ஓய்வுபெற்ற அதிபர் கந்தசாமி மற்றும் தாதிய உத்தியோகத்தர் பரமேஸ்வரி தம்பதியரின் மூத்த புதல்வராவார். இளைய புதல்வர் அகிலனும் ஒரு மருத்துவராவார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours