க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளியிருந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம்  வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன்-ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போட்டித் தொடரில் சாதனை படைத்த 8 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகப் பிரதிப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்து, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்த பாடசாலைகளான வின்சென்ட் உயர்தர மகளிர் பாடசாலை,புனித சிசிலியா பெண்கள் பாடசாலை,மெதடிஸ்த மத்திய கல்லூரி,புனித மிக்கேல் கல்லூரி,புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம்,கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளே தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும்,பாடசாலைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.இம்மாணவர்களை வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து வலயக்கல்வி பணிப்பாளர் பாராட்டி கௌரவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours