(எம்.என்.எம்.அப்ராஸ்) 

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாரை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணி,தியாகம் மற்றும் பொது மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று(12)நடைபெற்றது.


 இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கரை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் வகிபாகம் பற்றி பாராட்டப்பட்டது. இந் நிகழ்வில் வைத்தியசாலையின் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி கே.எல். எம்.றயிஸ்,பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம். எல். எம்.எஸ்.இர்ஷாத், கணக்காளர் யூ. எல். ஜவாஹிர், மேற்பார்வை தாதியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours