(கனகராஜா சரவணன்)



மட்டு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி  வருகிறார் அதன் பின்னர் வருமாறு தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.; மாநகர சபை இந்த முடிவை எவ்வாறு எடுத்தது? சபையை கூட்டியா? அல்லது காட்டுச் சட்டமா?  தனிநபர் எடுத்த முடிவா? அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக? என ஈ.பி.டிபி. கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்;குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

மட்டு பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி   காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


எதிர்வரும் 20 ம்திகதி மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவுக்கு  ஜனாதிபதி வருகை தந்து திறக்கவுள்ளார் அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்


இருந்த போதும் மட்டு மாநகர சபைக்கு 15ம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் தமது சேவைகளை பெற சென்ற போது அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் ஜனாதிபதி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகிறார் ஆதலால் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளி வேலைக்கு சென்று விட்டனர் எனவே எங்களால் எந்த சேவையும் செய்ய முடியாது ஜனாதிபதி நூலக திறப்பு விழாவிற்கு வந்து போன பின்னர் நீங்கள் வருமாறு தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பினார்கள்


இது தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்து ள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி கியுபார் முறையில் எரிபொருள் நிரப்பி தங்களுடைய அத்தியாவசிய சேவையை பெற வந்த மக்கள் தமது சேவையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் வெறும் கையுடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே மட்டு மாநகர சபை இந்த முடிவை எவ்வாறு எடுத்தது? சபையை கூட்டியா? அல்லது காட்டுச் சட்டமா? தனிநபர் எடுத்த முடிவா? மாநகர சபையில் ஒரு முடிவு எடுப்பதாயின் சபையை முதல்வர் கூட்டி சபை ஏகமனதாக தீர்மானிக்க வேண்டும் அவ்வாறு ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டு ஜனாதிபதி வந்து நூலகம் திறக்கும் வரைக்கும் இந்த சேவையை நிறுத்துவதற்கு தன்னிச்சையாக யார்? இந்த காட்டு சட்டத்தை கொண்டு வந்தது?

எனவே ஜனாதிபதி வந்து போகும் வரைக்கும் மட்டு மாநகர சபையில் எந்த சேவையும் இடம்பெறக்கூடாது என உங்களிடம் ஜனாதிபதி கூறியிருக்கின்றாரா? இல்லை அவர் எப்போதும் அவ்வாறு கூற மாட்டார்?

ஜனாதிபதியின் முகத்தை அறிந்து தான் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து அவரை கொண்டு வந்தனர். இன்று மக்கள் மத்தியில் உள்ள அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கின்றீர்களா?

எனவே தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த காட்டு சட்டம் யாரால் எடுக்கப்பட்டது?  என மக்களுக்கு உடனடியாக ஒரு தெளிவூட்டலை மாநகரசபை முதல்வர் ஆணையாளர்  கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக காந்தி பூங்காவில் வாகன தரிப்பிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் பொது நூலக வளாகத்தில் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து தலைகவசம், கை பைய், கையடக்க தொலைபேசிகள் மற்றும் குடைக்கு என தனித்தனியாக  50 ரூபா வீதம் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு வந்தோம்.

இருந்தும் இன்று வரை அந்த சட்டவிரோத கொட்டகைகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை காலம் தாழ்த்தபடாமல் அந்த கொட்டகை அகற்றப்படவேண்டும் இவ்வாறு அகற்ற படாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருந்து தான் அகற்றப்படும் என்றால் நான் உண்ணாவிரதம் இருக்க தயார்

அது மட்டுமல்ல மட்டு போதனா வைத்தியசாலை வாகன தரிப்பிடம் தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் பல முறைப்பாடுகளை தெரிவித்து ள்ளனர்ஒருவர் மட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் அவரை  பார்ப்பதற்கு 2 பேர் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்துவதற்கு 70 ரூபாவும்  அவர்களது இரு தலைக்கவசம் ஒன்றுக்கு 60 ரூபா வீதம் 120 ரூபா இவ்வாறு ஒரு நேரத்திற்கு 200 ரூபா செலவு செய்ய வேண்டியுள்ளது

அதேவேளை போதன வைத்தியசாலையில் கூடுதலான மருந்துகள் இல்லை, எக்ஸ்ரே எடுக்கும் கருவிகள் இல்லை என கூறி வருகின்ற நோயாளிகளிடம் வைத்தியர்கள் இந்த எக்ஸ்ரே வெளியில் எடுத்து வா இந்த மருந்து இங்கு இல்லை வெளியில் எடுத்து வா என அனுப்புகின்றனர்.

இவ்வாறான நிலையில் வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளை ஒரு தரம் வைத்து வெளியில் எடுத்தால் 70, ரூபாவும்  தலைக்கவசத்திற்கு 60 ரூபா என வைத்தியசாலைக்கு வருகின்ற இந்த நோயாளிகளிடம் மறைமுகமாக கப்பம் அறவிடப்படுகின்றது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒருவர்  வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் அன்றைய தினத்திற்கு ஒரு பற்றுச்சீட்டை வழங்கினால் அன்றைய தினம் வரைக்கும் எத்தனை தரமாவது மோட்டார் சைக்கிளை வைப்பதற்கு அனுமதியை வழங்க வேண்டும்.


நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்படும் போது வைத்திய துறைக்கு பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது இருந்தபோதும் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக வறிய மக்களிடம் பணம் இல்லாத போதும் நீங்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றீர்கள்

மறைமுகமாக மக்களிடத்தில் நீங்களும் நாயின் இரத்தத்தை உன்னி குடிப்பதை போல் நீங்களும்  நோயாளிகள் வரும்போது இரத்தத்தை குடிப்பது போல பணங்களை உறிஞ்சி குடிக்க கூடாது


எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .
அதேவேளை மாசகரசபை பொதுச் சந்தையில் 3 மாட்டு இறைச்சி கடைகள் இருந்தன அதனை பல இலச்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டதை எடுத்த அவர்கள் அதனை நடாத்த முடியாமல் இறைச்சி கடைகளை கைவிட்டுவிட்டனர் இதனால் இறைச்சி வாங்க ஏறாவூர் அல்லது காத்தான்குடிக்கு சென்று ஒரு கிலோ இறைச்சி வாங்க 300 ரூபா எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்


எனவே இது யாருடைய பிழை மாநகரசபை சிறிய கடைகளை பல இலச்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்குவதால் தான் இந்த பிரச்சனை எனவே அதற்கு மாநகர சபை பொறுப்பு கூற வேண்டும் என்றார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours