(கனகராஜா சரவணன்)



மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைகவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என  பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலித்து வருகின்றனர். இந்த நிதி மாநகர சபைக்கு செல்லுகின்றதா? யார் கையாளுகின்றனர்? யார் பெற்றுக் கொள்கின்றனர் என மட்டு மாநகர முதல்வர் ,ஆணையாளர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா ஒருங்கிணைப்பாளர் அ.ராஜ்குமார் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னாள்  உள்ள வாகன தரிப்பிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது இதில் மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபா பணம் அறவிடுகின்றனர் அந்த மோட்டார் சைக்கிளில் வருபவர்களின் தலைகவசத்தை பாதுகாக்க வேண்டியது அந்த வாகன தரிப்பிடத்தை குத்தகைக்கு பெற்றவர்களது கடமை

ஆனால் பொது நூலகத்துக்குள் சட்டவிரோதமாக ஒரு கொட்டகையை அமைத்து அதில் நீதிமன்றத்துக்கு வருகின்றவர்களின்  உடமையை பாதுகாப்பதாக கூறி தலைக்கவசம், குடைகள், கையடக்கதொலை பேசிகள் போன்ற பொருட்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 50 ரூபா தொடக்கம் 100 ரூபாவரை பணத்தை வசூலித்து ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
தலைக்கவசம் மோட்டர் சைக்கிளுடன் சம்மந்தப்பட்டது மோட்டார் சைக்கிள் ஓட வேண்டுமாக இருந்தால் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் ஆதலால் நாங்கள் மோட்டார் சைக்கிளின் மீது தலைக் கவசத்தை; வைத்து விட்டு சென்றால் அதனை பாதுகாக்க வேண்டியது குத்தகை;கு பெற்ற உரிமையாளரதும் அங்கு கடமையாற்றும் உத்தியோக த்தர்களது கடமையாகும்.
 
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாது மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபாவும் தலைக்கவசத்துக்கு 50 ரூபாவும் அறவீடு செய்கின்றனர் இது ஒரு சட்டத்துக்கு விரோதமான மறைமுகமான கப்பமாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பார்க்கின்றது
 
மாவட்ட பொது நூலகத்திற்குள் சிறிய கொட்டகையை அமைத்து தலைக்கவசம் குடைகள், கையடக்க தொலைபேசிகள்  போன்ற உடமைக ளை வைப்பதற்கு சட்டவிரோதமான முறையில் பணம் வசூலித்து வருகின்றனர். இங்கு வசூலிக்கப்படும் பணம் எங்கு செல்கின்றது? இந்த பணத்தை வசூலிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது?

காந்தி பூங்காவில் குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது வாகன தரிப்பிடத்துக்கு மட்டும் எனவே அவ்வாறு இருக்கும் நிலையில் பொது நூலகத்துக்குள் ஒரு கொட்டகையை அமைத்து அதில் நீதிமன்றத்துக்கு வருகின்றவர்களின் உடமையை பாதுகாப்பதாக கூறி மாவட்டத்தில் உள்ள ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

கடந்த காலங்களில் ஒரு சில இயக்கங்கள் ஒரு போத்தல் மதுபானத்துக்கு 50 தொடக்கம் 100 ரூபா வரை பணம் கப்பம் பெற்றது போன்று இன்று சட்டவிரோதமாக கப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இந்த பொது நூலகத்துக்குள்ளே கொட்டகை அமைத்து இந்த நிதியை அறவிடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ? கப்பம் பெறும் நிதி அறவிடும் செயற்பாட்;டிற்கு யார் இடம்கொடுத்தது ? தினமும் 20 ஆயிரம் தொடக்கம் 25 ஆயிரம் ரூபாவரை நிதி வசூலிக்கப்படுகின்றது இந்த நிதி மட்டு மாநகர சபைக்கு செல்லுகின்றதா? இந்த நிதியை யார் கையாளுகின்றனர்? இந்த நிதிகளை யார் பெற்றுக் கொள்கின்றனர் என மட்டு மாநகர முதல்வர் ,ஆணையாளர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று ஒருவருக்கு நீதிமன்றில் வழக்கு ஒன்று இருந்தால் அவரை பிணை எடுப்பதற்காக  இரண்டு பேர் செல்லவேண்டியுள்ளது இந்த 3 பேருக்கான தலைகவசம், கையடக்க தொலைபேசிகள், குடைகளுக்கான நிதி என சாதாரணமாக ஒருவா மோட்டார் சைக்கிளை நிறுத்துவதாக இருந்தால் 500 ரூபாவுக்கு மேல் பணத்தை அறவிடுகின்றனர் இது உண்மையிலே முற்று முழுதாக சட்டத்துக்கு விரோதமான ஒரு செயற்பாடு

வாகனத்துக்கான  தரிப்பிடம் வழங்கப்பட்டால் வாகனத்துக்;கான நிதியை மட்டும் அறவிடவேண்டும் அதைவிடுத்;து பொது நூலகத்துக்குள் கொட்டகை அமைத்து நிதி அறவிடுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை எவரும் அதிகாரம் கொடுக்க முடியாது இது பொது நூலகம் எனவே இந்த நிதி அறவிடும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் இந்த சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்த தவறும் பட்சத்தில் இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை நாடவேண்டி ஏற்படும் என்பதை மட்டு மாநகர சபை முதல்வர் ,ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் எங்கள் அனுமதி இன்றி பொது நூலகத்தில் பொட்டகை அமைத்து நிதி வசூலிக்க முடியாது எனவே மக்களிடம் இருந்து கப்பமாக வசூலிக்கும் இந்த நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours