-

((கனகராஜா சரவணன்) )



மட்டக்களப்பு மாவட்டத்தில் இன. மொழி வேறுபாடுகளை கலைந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்து மக்கள் பிரதேச வாதத்தையும்  மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் இன்று தோற்கடித்துள்ளனர் அதேவேளை கடந்த கால தேர்தலிலே இந்த மாவட்டத்தை கைப்பற்றி கொண்டதாக தெரிவித்து கொண்டவர்கள் இன்று  மக்களுக்குள்ளே ஒழிந்து மக்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். என தேசிய மக்கள் சக்தி நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்


மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று முதலாம் திகதி இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினத்தி கலந்துகொண்ட நா.உறுப்பினர் கந்தநாமி பிரபு இவ்வாறு தெரிவித்தார்.


காலி முகத்திடலில் நாங்கள் ஒன்று கூடும்போது எதிர்கட்சியின் எங்களை கேலி செய்து கொண்டிருந்தனர்ஆனால் இன்று 21 மாவட்டங்களிலும் அலை கடல் போல மக்கள் திரண்டு இந்த மக்கள் ஆட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என எதிர்கட்சிகளுக்கு நிரூபித்து காட்டியுள்ளனர்.


கடந்த கால தேர்தலிலே இந்த மாவட்டத்தை கைப்பற்றி கொண்டதாக தெரிவித்து கொண்டவர்கள் இன்று  மக்களுக்குள்ளே ஒழிந்து மக்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்று எமது தோழர்கள் இனமொழி வேறுபாடுகளை கலைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாதத்தை மற்றும் மேட்டுக்குடி வர்கத்தின் ஆதிக்கத்தை தேற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்துள்ளோம்.


மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கொள்வதாக கடந்த காலங்களில் பல ஊழல்களையும், போலி விமர்சனங்களையும் பரப்பி கொண்டவர்கள் இன்று வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆட்சியை பெறுப்பேற்றதும் அனைத்து மாவட்டங்களிலும் அபிவிருத்தியை செய்து வருகின்றோம் அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம்


கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நட்டை பொறுப்பேற்றோம் இன்று சர்வதேச ரீதியாக ஒரு பலம் பொருந்திய அரசாக அரசாங்கம் இருக்கின்றது என்பதுடன் ஜனாதிபதி   எந்த நாட்டை நோக்கி பயணித்துக் கொண்டால் அந்த நாடுகள் கைகோர்த்து பயணிக்க காத்துக் கொண்டிருக்கின்றது.


சர்வதேச ஆதரவு இருக்குது என்றவர்கள் நீண்டகாலமாக கடனில் ழூழ்கியிருந்த நாட்டை மீட்க முடியாதவர்களாக இருந்தனா.; ஆனால் இன்று கடன்களை மீள் செலுத்துகின்ற அபிவிருத்தியை செய்கின்ற ஒரு ஆட்சியாக இன்று தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது இவை அனைத்து மாற்றத்துக்கு காரணமானவர்கள் மக்களாகிய நீங்கள் மட்டும் தான்.

டித்தா புயல் தாக்;கத்தினால் மொத்தமாக நாடு சீரழிந்தது மட்டுமல்ல அனைத்து போக்குவரத்து கட்டமைப்பும் சீரழிந்தது இதனை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவந்தோம்.

முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து இன்று தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியாகும் எனவே எந்தவிதமான பொய்பரப்புக்ளையும் குளறுபடிக ளையும் எதிர்கட்சிகள் செய்தாலும் அனைத்தும் இந்த மக்களால் தோற்கடிக்கப்படும்.

அண்மையிலே இடம்பெற்ற மோதலை தேசிய மக்கள் சக்தி மீது பழிபோட முற்பட்டபோது அதனை மக்காளால் தோற்கடிக்கப்பட்டு அந்த ஆர்ப்பாட்காரர்களை விரட்டியடித்தனர். அவ்வாறே உழைக்கும்  வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை கவிழ்க முற்படும் எதிர்கட்சிகளை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்றார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours