(கனகராஜா சரவணன்



மட்டக்களப்பு வாவியில் உயிரிழந்த நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் இனம் தெரியாத நிலையில் இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் அதேவேளை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலம் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை சம்பவ தினமான இன்று மாலை 5.00 மணிக்கு கண்ட அப்பகுதியினர் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு  நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர் இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதேவேளை நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.   




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours