கல்குடா
பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி
தினத்தில் மதுபான வியாபாரத்தில்
ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட
பொலிசார் அங்கிருந்து 72 பியர் ரின்கள், 25 கால் போத்தல் கொண்ட
மதுபானங்களுடனான போத்தல்களை மீட்டதுடன் 42 வயதுடைய பெண் வியாபாரி ஒருவரை
கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு
பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு போதை
ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான
குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன் போது
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல வியாபாரியான 42 பெண் ஒருவரை
கைது செய்ததுடன் பியருடனான 72 பியர் ரின்கள், கால் போத்தல்கள் கொண்ட
மதுபானத்துடனான 25 போத்தல் மதுபானங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours