( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த
திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான இன்று (1) திங்கட்கிழமை மடிப்பிச்சை
எடுக்கின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
காலையில் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 2000 பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். வழிநெடுகிலும் மக்கள் அவர்களுக்கு நெல்லை வாரி வழங்கினார்கள்.
அவர்கள்
அதனை மடியில் ஏந்திக்கொண்டு நேராக 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஸ்ரீ
கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கு சடங்குகள் சகிதம் அந்த நெல்லை அங்கு
பெற்றுக் கொண்டார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours