(கனகராஜா சரவணன்;)

மட்டக்களப்பு  பிரதான பஸ் தரிப்பு நிலையம் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை 3.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார் இவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவரை அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாரிடம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் மட்டு தலைமையக பொலிசார்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த பகுதியில் உள்ள வாவியை அண்டிய பகுதியில் உள்ள மரத்தின் கீழ் உயிரிழந்த நிலையில் 60 வயது மதிக்க கூடிய ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்தவரை அடையாளம் காணததை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours