இ.சுதாகரன்


வேலன் இலவசக் கல்வி நிலையத்தால் பயன் தரும் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் வேலன் இலவசக் கல்வி நிலையத்தின் ஸ்தாபகர் துரைசிங்கம் வேழலகன் அவர்களின் ஐம்பதாவது அகவையினை முன்னிட்டு கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் நேற்றைய தினம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த பிரேத்தியேக வகுப்புக்களுக்கு செல்வதற்கு பணம் இல்லாது பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள சுமார் நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட தரம் 1 முதல் 11 வரையான தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் குறித்த இலவசக் கல்வி நிலையத்தில்  தமது கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர். 

தரம் 6 முதல் 11 வரையான மாணவர்களுக்கு பிரதான பாடங்களும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கலைத்திட்டத்தினை தழுவிய கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த இலவசக் கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாணவர்களின் நலனினைக் கருத்திற்கொண்டு வருடா வருடம் இலவச கல்விச் சுற்றுலா முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours