( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பு மற்றும் மயானவீதி பகுதிகள் காரைதீவு
பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (8) திங்கள் கிழமை துப்பரவாக்கப்பட்டன.
பிரதேச
சபை தவிசாளர் சு. பாஸ்கரனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
இத்துப்பரவு நடவடிக்கையில் கனரக வாகன உதவியுடன் சபை ஊழியர்கள் பங்கேற்று
வீதியின் இருமருங்கிலும் காடுபற்றிக் கிடந்த மரங்கள் செடி கொடிகள்
அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும்
மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள்
சுகாதாரமான சூழலில் வாழ்வதையும் இலகுவாக பயணிப்பதையும் உறுதிப்படுத்தும்
நோக்கில் இவ்வாறான துப்பரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.




Post A Comment:
0 comments so far,add yours