(கனகராஜா சரவணன்) 



மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒரு வரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.சி.பி. வசந்த குமார தெரிவித்தார்.


பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்


இதில் கைது செய்யப்பட்டவரை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours