விஞ்ஞான கண்காட்சியும் புத்தாக்க போட்டி நிகழ்வு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் 

இளம் கண்டு பிடிப்பாளர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வானது அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம் (03) பாடசாலையின் அதிபர் திரு. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். சுரனுதன் பிரதம அதிதியாகவும் ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.செல்வம் அவர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 

மேலும் திருக்கோவில் வலயக்கல்வி விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள்,

 மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பங்கு பற்றிய முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருமதி. ச.கிசோபனா ஆசிரியை மற்றும் அனைத்து விஞ்ஞான பாட ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் விஞ்ஞான குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours