(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம் ,போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி வட்டாரத்தில் குண்டும் குழியுமாக காணப்பட்ட வீதிகள் அனைத்தும் இன்று (13.06.2026)ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாகப் புனர்நிர்மாணம் செய்து சீரமைக்கப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பிரதீக்குமார் விடுத்த வேண்டுகோளுக்கமைய, பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனனின் அனுமதியுடன், உப தவிசாளர் த.கயசீலன்,வட்டார உறுப்பினர் வரதராஜாவின் நேரடி கண்காணிப்பில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு, வெல்லாவெளி கிராமத்தின் உள்வீதிகள், பீலியாறு வீதி, மயான வீதி மற்றும் மாரியம்மன் ஆலய வீதி ஆகியன போக்குவரத்துக்கு உகந்த வகையில் சீரமைக்கப்பட்டன.இப்பணியில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் பொதுமக்களும் இணைந்து சிரமதான ஒத்துழைப்பை வழங்கினர்.
எதிர்வரும் (19.06.2026)ஆம் திகதி வெல்லாவெளி மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, அம்மன் வீதியுலா (ஊர்காவல்) வருவதற்கான ஏற்பாடாக இவ்வீதிகள் அவசரமாகச் சீரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)





Post A Comment:
0 comments so far,add yours