(வி.ரி.சகாதேவராஜா)
ஈழ
மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் ( ஈபிஆர்எல்எவ்) இருந்து ,
மண்ணுக்காக உயிர் நீத்த காரைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மோகன் - கணேஷ்
ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட்
சுற்றுப்போட்டித் தொடரின் இறுதி நிகழ்வில், அவர்களின் உற்ற நண்பர்களான
புலம்பெயர் தோழர்கள் மூவர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இறுதிப் போட்டி நிகழ்வு காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று (20) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலஞ்சென்ற
மோகன் கணேஷ் ஆகியோரின் நண்பர்களான, லண்டனில் இருந்து தோழர் பாஸ்கரன் (
காரைதீவு ) ,தோழர் ஷிராப் (தம்பலகாமம்) அத்துடன் பிரான்சிலிருந்து தோழர்
ஜோதி (கொக்கொட்டிச்சோலை )
ஆகிய மூன்று நண்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
விடுதலை
இயக்கத்தில் இருந்து உயிர் நீத்த சக தோழர்களின் நினைவு நிகழ்வில்,
அவர்களது உற்ற நண்பர்கள் மறக்காமல் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்து
கலந்து கொண்டமை நட்புக்கும் தியாகத்திற்கும் ஒற்றுமைக்கும் ஒரு
முன்மாதிரியாக இருந்தது.





Post A Comment:
0 comments so far,add yours