(கனகராஜா சரவணன்)
நீர்கொழும்பு
சிறைச்சாலையில் இருந்து இராணுவம் விசேட அதிரடிப்படையினர் பலத்த
பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று
செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை
அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை
சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர்.
நீர்கொழும்பு
சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைச்சாலை
அதிகாரிகள் 5 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை
படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை
இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து சிறைச்சாலை
பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 400
கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல
இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில்
இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து ஆயிரத்து 20 கைதிகள் (1020)
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
அதேவேளை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் 63 கைதிகள் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.


Post A Comment:
0 comments so far,add yours