அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தராகப் பணியாற்றி, கடந்த மாதம் இடமாற்றம் பெற்று சென்ற ஜனாப் எஸ். எம். அபுல்காசிம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஆலையடிவேம்பு சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (05.07.2026) ஆம் திகதி 7/4 RDS கட்டிடத்தில் நடைபெற்றது.


நிகழ்வில், மூத்த பிரஜைகளும் இந்து இளைஞர் மன்றத் தலைவருமான த. கைலாயபிள்ளை மற்றும் வே. சந்திசேகரம் ஆகியோர் ஜனாப் எஸ். எம். அபுல்காசிம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், வாழ்த்துப்பா வாசித்து நினைவுப் பரிசும் வழங்கினர்.


இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் வி. சிவன்செயல், செயலாளர் ஐ. புண்ணியமூர்த்தி, பிரதேசத்தின் மூத்த பிரஜைகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட பிரஜைகளின் திறனை வெளிப்படுத்தும் பாடல்

நிகழ்வும் இடம்பெற்று  நிகழ்விற்கு மேலும் சிறப்பூட்டின.





(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours