நிதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களில் ஒருவராக மட்டக்களப்பு, களுதாவளையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரச அதிபர் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி என். ஆர். அனீஸ், உறுப்பினர்களில் ஒருவராக மட்டக்களப்பு களுதாவளை ஓய்வு நிலை அரச அதிபர் கே. கருணாகரன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே.எம்.சி.ஜே. விஜேதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (20/07/2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார்.
நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Post A Comment:
0 comments so far,add yours