(அஸ்லம்)


கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் சனிக்கிழமை (25) கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம். பாறூக் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுச் சபைக் கூட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி.ஜலால்டீன், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சி.எம்.அஷ்ரப், கே.கிரிதரன், முன்னாள் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.கனகசுந்தரம் ஆகியோர் உட்பட மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை, அம்பாறை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

       இதன்போது, தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் விரிவாக கலந்துந்துரையாடப்பட்டதுடன் புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

தலைவராக ஏ.எல்.எம். பாறூக், செயலாளராக எஸ். ஜாபீர், பொருளாளராக ஏ.அமலராஜா, உப தலைவராக எல்.ஜி.சி. லீனஸ், உப செயலாளராக டி.எம்.பி. நிசாந்தி ஆகியோருடன் நிருவாக சபை உறுப்பினர்களாக எச்.எம்.கே.ரஹ்மான், எம்.ஏ.எம். அன்வர், எஸ்.எம்.ஏ. ஹாதி, எஸ்.விபுலானந்தராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours