கனகராஜா சரவணன்)



உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக இருந்து வரும் சுப்பிரமணியம் என்றழைக்கப்படும்  நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து அகற்று பொலிசாரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி ஊடாக கதிர்காமத்துக்கு எடுத்துச் சென்ற சேர்க்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் இடம்பெற்றுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த நாயின் உரிமையாளர் கதிர்காம முருகன் ஆலயத்துக்கு  பாதயாத்திரை  செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஊடாக சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் கடந்து பாணமையை சம்பவ தினமான நேற்று இரவு சென்றடைந்தனர்  

இந்த நிலையில் குறித்த நாயை பாதயாத்திரை குழுவினரை தலைமை தாங்கி சென்றவருக்கு நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தையடுத்து அந்த குழுவில் இருந்து நாய் உரிமையாளர் பிரிந்து பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கி கொண்டார்

அதன் பின்னர் நாய் உரிமையாளர் பாணமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று  சுப்பிரமணியம் என பெயர் வைத்து  நான் வளர்த்து வந்த எனது நாய்  நான்; பாதை யாத்திரை செல்லும் போது என்னுடன் பின் தொடர்ந்து வந்துள்ளது இந்த நாயை வைத்து பாதையாத்திரை குழுவினை சேர்ந் ஒருவர் பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே நான் எனது நாயை கதிர்காமத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாக பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் அனுமதியளித்ததையடுத்து குறித்த நாயை அதன் உரிமையாளர் முச்சக்கர வண்டி ஒன்றின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த நாயை கல்முனையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கி விவகாரத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட துடன் இந்த சம்பவம் தொடர்பாக இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் முகநூலில்  மதங்களை இழிவுபடுத்தி கருத்துக்களை பதிவு செய்ததுடன் சவுதியில் இந்து இளைஞர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக முஸ்லிம் மதத்தை இழுவுபடுத்தி    பதிவு    செய்ததையடுத்து   அவர் சவுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இது ஒரு மத விவகாரங்களாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours