(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளோற்றினால் வெட்டி தற்கொலை செய்ய முயற்நித்த ஆண் ஒருவரை பொதுமக்;கள் பொலிசாருடன் மீட்டு வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றதையடுத்து அங்;கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது




குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு பிளோற்றினால் தனது கழுத்ழத தானே வெட்டி தற்கொலை செய்யு கொள்ள முயற்சித்ததையடுத்து வீதியால் வந்த பொதுமக்கள் பொலிசாhர் இணைந்து குறித்த நபரை பிடித்து கை கால்களை கட்டி 1919 அம்புலன்ஸசில் ஏற்றி ம்ட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிதனர்

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் எனவும் மனநோய் கொண்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours