பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சத்துருக்கொண்டானை சேர்ந்த சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமணம் கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நியமனத்தைப்பெற்றுக்கொண்ட ஜெய் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய அரசியல் மாற்றத்துக்காக தனது தலைமை நாமல் ராஜபக்ச (பா.உ) ஆசிர்வாதத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
(ரஞ்சன்)

Post A Comment:
0 comments so far,add yours