( வி.ரி. சகாதேவராஜா)

உகந்தை குமண ஊடாக கானகப் பாதையில் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு அன்னக்கஞ்சியும் மூலிகைத் தேநீரும் வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் அங்கு நடுஅடவியில் அதனைத் தயாரித்து யாத்ரிகர்களுக்கு வயிறார தாகம் தீர்த்தார்கள்.

அந்த இடத்தில் அவர்களுக்கு அது தேவாமிர்தமாக இருந்ததாக குறிப்பிட்ட அடியார்கள் , "புண்ணியம் கிடைக்கும்" என்று மனதார வாழ்த்திச் சென்றார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours