கல்முனை றோட்டரிக் கழக புதிய தலைவர் திருநாவின் முதல் வேலைத்திட்டம் வெற்றி 

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை றோட்டரிக்கழகத்தின் 2026/27ம் வருடத்திற்கான புதிய தலைவராக  ரோட்டரியன் இராசையா திருநாவுக்கரசு   ஜீலை 1ந் திகதி பதவியேற்ற பின்னர் முதலாவது வேலைத்திட்டமாக, பின் தங்கிய பிரதேசத்திலுள்ள 603 மாணவர்களுக்கு 420,000/- பெறுமதியான 3600 அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளார்.

திராய்கேணி அ த க பாடசாலை,அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம், காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம் மற்றும் கல்முனை இராம கிருஷ்ண மிசன் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலை மாணவர்களுக்காக இவ் அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ரோட்டரியன் மு.சிவபாதசுந்தரம் செயலாளர்,  ரோட்டரியன் ந.றதீசன் சமூக சேவை குழுத்தலைவர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்,ஆசிரியர்களாகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கான நிதியை கடந்த ஐந்து வருடங்களாக கல்முனை பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நிதியுதவியளித்துவரும் கன்பேரா வெஸ்ரன் கிறிக் றோட்டரிக்கழகம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours