( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.
பாதயாத்திரிகர்களின்
நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations
Private Limited-இன் 'வெற்றியின் கரங்கள்' அமைப்பு, ஒரு மனிதாபிமான சேவையை
முன்னெடுத்திருந்தது.
அதன்படி,
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின்
முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த 130-க்கும் மேற்பட்ட
யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


Post A Comment:
0 comments so far,add yours