35ஆம் கிராமம், கண்ணபுரம், விளாந்தோட்டம், அலியாரவட்டை ஆகிய கிராம மக்களின் பிரதான மயானமான இது, நீண்டகாலமாகப் புதர் மண்டிக் காணப்பட்டதால் காட்டு யானைகள் மற்றும் விஷப் பிராணிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.
இந்நிலையைக் கட்டுப்படுத்த பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உப தவிசாளர் த. கயசீலன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் JCB இயந்திரங்கள் மூலம் மயானம் முற்றாகத் தூய்மைப்படுத்தப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 10 வட்டாரங்களிலும் தொடரும் இவ் விசேட வேலைத்திட்டம்.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள காடுமண்டிய காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காணி உரிமையாளர்கள் 7 நாட்களுக்குள் தங்களது காணிகளைத் துப்பரவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கிராம உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் இளைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என உப தவிசாளர் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரஞ்சன்)





Post A Comment:
0 comments so far,add yours