( வி.ரி. சகாதேவராஜா)
இந்துமத எழுச்சியாக
சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" " தில்லை மண்டூர்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த தலபாதயாத்திரை இன்று 22ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவிலிருந்து அதிகாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகியது.
சுமார் 05 மணிநேரம் இடம்பெற்ற இப் பாதயாத்திரையில் காரைதீவு மக்களோடு ஏனைய அட்டப்பள்ளம் நிந்தவூர்,கல்லாறு, பெரிய நீலாவணை, வீரமுனை, கல்முனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, துரவந்தியமேடு, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களின் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீராகாரம் குடிநீர் தாராளமாக அந்தந்த பிரதேச மக்களால் வழங்கப்பட்டது.
தம்பலவத்தையில் சிவரஞ்சித்- ஜீவா சகோதரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.

.jpg)




Post A Comment:
0 comments so far,add yours