(ஆ.நிதாகரன்)
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுச்சிறப்புமிக்க மட்டக்களப்பு  மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவமானது இன்று (08) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இக்கொடியேற்ற நிகழ்வானது போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார் முன்னிலையில் இடம் பெற்றது

தொடர்ந்து இருபது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று 21ம் நாளான எதிர்வரும் 28.08.2026 வெள்ளிக்கிழமை மூங்கிலாற்று சங்கமத்தில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும் இவ் கொடியேற்ற நிகழ்வுகளில் நாட்டின் பலபாகங்களிலிருந்து அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.














Share To:

Post A Comment:

0 comments so far,add yours