( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி மகோற்சவத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
அதற்காக, நாளை(2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்து, ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் , உற்சவகாலபிரதம குரு சிவஸ்ரீ க.திருக்குமாரக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.
பத்தாம் நாள், எதிர்வரும் 12ஆம் தேதி புதன்கிழமை காலை ஆடி அமாவாசைத் திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய அன்று சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும்.



Post A Comment:
0 comments so far,add yours