( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் இன்று(14) வெள்ளிக்கிழமை காலை விசேட இறைவழிபாடுகளின் பின்பு இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமா தவானந்தா ஜீ மகராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தார்.,மட்டு வலய கல்விப் பணிப்பாளர் எஸ். ரவி கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் எம்.துதிஷ்கரன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் ,கல்வித் திணைக்கல பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயல்பாடுகளை வினைத் திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

.jpg)
Post A Comment:
0 comments so far,add yours