சா.நடனசபேசன்

யப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பினால் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்நிகழ்வு

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் கராத்தே பயிலும் மாணவர்களுக்கு யப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இரண்டு நாள் கராத்தே வதிவிடப் பயிற்சி முகாம்  இடம் பெற்றது. 

.இம்மாணவர்களுக்கான சான்றிதழ் கிழக்கு மாகாண பிரதம கராத்தே போதனாசிரியரும், பரீட்சகருமான, பொறியியலாளர்  எஸ். முருகேந்திரன் அவர்களால்  வியாழக்கிழமை 27 மாலை வழங்கிவைக்கப்பட்டது.

இப்பயிற்சி செயலமர்வானது கிழக்கு மாகாண பிரதம கராத்தே போதனாசிரியரும் பரீட்சகருமான பொறியியலாளர்  எஸ். முருகேந்திரன் தலைமையில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் இடம் பெற்றது. 

இதில் கராத்தே சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களான  எஸ் பால்ராஜ், எஸ். சோபன்ராஜ் ,திருமதி ஆர்முருகேந்திரன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். ,

.




























































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours