எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது.
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்தனர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.
மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.


.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
Post A Comment:
0 comments so far,add yours