மட்டக்களப்பு போரதீவுப்பற்று, 35ஆம் கிராமம்,கண்ணபுரம்  ஸ்ரீ நாராயணன் ஆலயத்தில் இருந்து 37ஆம் கிராமம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை நோக்கிய சிறப்பு பாற்குட பவனி மற்றும் 1008 சங்காபிஷேகப் பெருவிழா இன்று (15.09.2026) ஆம் திகதி மிகவும் பக்திப் பெருக்கோடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இன்றைய நன்னாலையில், 35ஆம் கிராமம் நாராயணன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பாற்குடங்களை ஏந்தியவாறு ஊர்வலமாகப் புறப்பட்டனர். 

பிரதான வீதி வழியாகப் பயணித்த இப்பாற்குடப் பவனி, பஞ்சவாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் 37ஆம் கிராம மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆலயத்தை வந்தடைந்த பாற்குடங்களில் இருந்த பாலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் ஆலயப் பிரதம குருவினால் முறைப்படி செய்து வைக்கப்பட்டது.

​இவ்விழாவின்  மக்கள் நலனுக்காகவும் 1008 சங்குளைக் கொண்டு மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட "1008 சங்காபிஷேகப் பூஜை" மாரியம்மனுக்குப் பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளையும் ஆசியையும் பெற்றுச் சென்றனர்.


(எஸ்.ரஞ்சன்)





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours