கிழக்கு மாகாண சபையின் இரு முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான புதிய நியமனங்கள் இன்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, கிழக்கு மாகாண சபையின் பதில் பிரதி தலைமைச் செயலாளராக (நிர்வாகம்) திருமதி எல். பிரசாந்தன் அவர்களும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக திரு. என். மணிவண்ணன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜயந்த லால் ரத்னசேகர அவர்களினால் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours