(கனகராஜா சரவணன்
 
ரோட்டரி சர்வதேச அமைப்பின் மாவட்டம் 3220 – இலங்கை மற்றும் மாலைதீவு கீழ் இயங்கும் ரோட்டரி கழகம் பட்டிருப்புவின் இரண்டாவது பதவியேற்பு விழா சனிக்கிழமை (19) சிறப்பாக கல்லடியில் உள்ள கிறீன் காடின் உல்லாச விடுதியில் ரோட்டரி எஸ். லோஜிதராஜா தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டரி. குமார் சுந்தரராஜா, அதிதிகளாக  மாவட்டச் செயலாளர் ரோட்டரி இயன் இடமல்கொட, உதவி ஆளுநர் ரோட்டரி. எஸ்.ஜெகதீஜ்வரன், மாவட்ட ஆளுநரின் பிரதிநிதி ரோட்டரி ஜெகவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ரோட்டரி கழகம் பட்டிருப்புவின் 2026–2027 ஆண்டிற்கான புதிய தலைவராக ரோட்டரி. நிரோஷாந்த் சத்தியநாதன்   பதவியேற்றுள்ளதுடன், ரோட்டரி எஸ். லோஜிதராஜா பொருளாளராக எஸ். தர்சனன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்

இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, ரோட்டரி கழகம் பட்டிருப்பினால் கல்வி மற்றும் மாணவர் நலனை முன்னிறுத்தி மூன்று முக்கிய திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதன்போது முதலாவதாக பாடசாலைக்குச் சென்று வருவதில் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் நலனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக சுழு குடிநீர் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்தும் குடிநீர் சுத்திகரிப்பு  உபகரணம் பாடசலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


தாந்தாமலையில் மாணவர்களுக்கான மாதாந்த கணித மேலதிக வகுப்பு தேவைப்படும் மாணவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாடசாலையில் தனியார் ஆசிரியர் மூலம் மேலதிக கணித வகுப்பு நடத்துவதற்காக மாதாந்தம் ரூ.20,000 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ரோட்டரி கழகம் பட்டிருப்பு,





 – 'தன்னலமற்ற சேவை' என்ற ரோட்டரியின் அடிப்படைக் கொள்கைக்கு அமைவாக, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், எதிர்காலத்தில் சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு பயனுள்ள சேவைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்

Create Lasting Impact” – நிலையான தாக்கத்தை உருவாக்குதல் என்ற ரோட்டரியின் 2026–2027 ஆண்டுக்கான நோக்கத்துடன் இணைந்து, பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இந்த மூன்று திட்டங்களும் மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை நலனில் நீண்டகால பயனை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கவுள்ளனர்.

இதில் மாவட்டத்திலுள்ள பல்வேறு ரோட்டரி கழகங்களின் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பயனாளிகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் என பலர்  கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. .
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours