எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை 2025ஆம் ஆண்டு பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் திறம்படவும் முன்னெடுத்தமைக்காக, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது.
இதனைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரும் கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினை நிரவாக உத்தியோகத்தர் ஏ. தாஹிர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ. நஜீம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக அழகியற் கலை பீடத்தின் இராசதுரை கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மக்கள் மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, தேவையுடைய மக்களுக்கு உரிய சேவைகளை திறம்பட வழங்கியமைக்கான அங்கீகாரமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours