​போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று (02.09.2026)  அதிகாலை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

பழுகாமம் வட்டார மக்களின் பிரதிநிதியாக நின்று, பிரதேசத்தின் பல்வேறு பொதுநலப் பணிகளிலும் மக்கள் அபிவிருத்தித் திட்டங்களிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இவரது திடீர் மறைவு பழுகாமம் பகுதியிலும், பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பழுகாமம் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் தொண்டே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு அமைவாக தமது வாழ்நாள் பூராக மக்கள் சேவகனாக பணியாற்றிய சிறந்த சமூகசேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours