(கனகராஜா சரவணன்) 



மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில்   தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார்.

மட்டக்களப்பில்  திங்கட்கிழமை ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.

நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.

இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது. ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க  பெறுப்பேற்றுள்ளார். அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால்  சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours