வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "திறமைக்கு மகுடம்" சிறப்பு நிகழ்வு மிகவும் கோலாகலமாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயச்சந்திரன், பாடசாலையின் அதிபர் தர்சநாத், முன்னாள் அதிபர்களான கோணேசமூர்த்தி, கமலநாதன், நிந்தவூர் இலங்கை வங்கியின் முகாமையாளர் ரஜனிக்காந் வளத்தாப்பிட்டி கிராம சேவகர் உதயராஜன். ஆகியோருடன் ஆலய நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை, கல்வி மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்வியியற் கல்லூரி, தாதியர்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றிற்குத் தெரிவான மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு, விசேடமாக பிரதேச கவிஞரான காரையன் கதனும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் உரியாற்றுகையில்,
இக்கிராம மக்கள் 1990 இல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் இன்று பெயர்சொல்லும் அளவில் கல்வியாலும், பொருளாதாரத்திலும் முன்னேறி வருவது வாழ்த்துதற்குரியது எனவும், உலகில் யூதர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் பிரித்து ஆளப்பட்ட போதும் இன்று உலகின் முன்னிலையாக வளச்சியடைந்து காணப்படுவது போன்று கல்வியால் நம் சமூகம் முன்னிலை வகிக்க வேண்டும். அத்துடன், பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கினங்க வேண்ட் வாத்திய கருவிகளை விரைவாக பெற்று தருவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது







Post A Comment:
0 comments so far,add yours