மட்டக்களப்பு துறைநீலாவணை லயன்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மாபெரும் கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கழகத் தலைவர் தம்பிமுத்து ரூபகுமார் தலைமையில் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணைப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டிக்கு மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்ததுடன் இறுதிப்போட்டிக்கு களுதாவளை கெனடிக் விளையாட்டுக் கழகமும், மகீழுர் பயனியர் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது. இதில் களுதாவளை கெனடிக்விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ்; ,தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் ஓய்வுநிலை அதிபர் மு.இராஜகோபால் ,சிறி முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் சா.புஸ்பராசா, ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் மற்றும் கழக வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டிக்கான அனுசரணையினை ஏ.துசாந் ,பி.சுகீர்தன், கே.அசோக், எஸ்.துசாபரன் ஆகியோர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















Post A Comment:
0 comments so far,add yours