இவ் வருடத்திற்கான நவராத்திரி விரதமானது கடந்த (11/10/2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, வருகின்ற (20/10/2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியன்று நிறைவடையவுள்ளது.
ஆலயத்தின் பிரதம குருக்களின் தலைமையில் காலை வேளையிலிருந்தே விசேட வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மூலமூர்த்தியான பாலீஸ்வர பெருமானுக்கும், தாயார் பாலாம்பிகவுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு விசேட அபிஷேகங்கள் இடம்பெறுவதுடன், அம்பாளுக்கு விசேட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் காட்டப்படுகின்றன.
ஆலய மண்டபத்தில் பக்திப் பாடல்கள் ஒலிக்க ஆன்மீகச் சூழல் களைட்டியுள்ளது.
அடியார்கள் ஆச்சார சீலர்களாக கலாச்சார ஆடையுடன் ஆலயத்திற்கு வருகை தந்து, முப்பெரும் தேவியர்களின் அருளாசியைப் பெற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருவதுடன், அடியார்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் வழங்கி வைக்கப்படுகின்றன.
ஆலயத்தின் நிர்வாக சபையினர் மற்றும் கிராமத்து அடியார்கள் இணைந்து இதற்கான சகல ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
(எஸ்.ரஞ்சன்)



Post A Comment:
0 comments so far,add yours