( ஆ.நிதாகரன் ) இலங்கைக்கு அண்மையாக உருவாகியிருந்த காற்று சுழற்சியானது தற்போதும் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. 

இதன் காரணத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கொண்ட காலநிலை தொடரும். 

இதேவேளை எதிர்வரும் 19ஆம் அல்லது 20ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளது. 


இந்த காற்று சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை காணப்படுவதுடன், 
வடக்கு மாகாணத்தில் பெரும்பாலும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என சிரேஷ்ர வானிலை அதிகாரி க. சூரியகுமாரன் ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இதனை வெளியிட்டுள்ளார்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours