போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எல்லை புறப்பகுதிகளை நாளாந்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உயிர்ச்சேதங்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்  போரதீவுப்பற்று பிரதேசசபை அலுவலகத்தால் பல மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட வெல்லாவெளி கலாசார மண்டபத்தின் சுற்றுமதிலை நேற்றைய தினம் காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளது.

பொருளாதார ரீதியில் பின்னடைவாக காணப்படும் போரதீவுப்பற்று பிரதேச மக்களின் நன்மையின் பொருட்டு குறித்த கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டு பொது மக்கள் தங்களுடைய சுப நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர் . குறித்த கலாசார மண்டபம்   இரண்டு தடவைகள் யானையின் தாக்குதலுக்கு  உட்பட்டிருக்தின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதிகரித்து வரும்  காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகள் உடன் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.





Share To:

Post A Comment:

0 comments so far,add yours