உலக விசர்நோய் தடுப்பு தினத்தை (World Rabies Day) முன்னிட்டு, மட்டக்களப்பு காளுவாஞ்சிகுடி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (28.09.2026) ஆம் திகதி விழிப்புணர்வு மாணவர்களுக்கான சித்திர போட்டிகளும் கோட்டைக் கல்லார் மகா வித்யாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
விசர்நோய் தடுப்பு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
(எஸ்.ரஞ்சன்)



Post A Comment:
0 comments so far,add yours